அன்பின்மடல்

மார்ச் 7- வியாழன்
இன்றைய நற்செய்தி:

லூக்கா 9:22-25

"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

அருள்மொழி :

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
லூக்கா 9:25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சாவை முதன் முறையாக அறிவிக்கின்றார். மானிட மகன் துன்பங்கள் பலபட்டு மரித்து மூன்றாம் நாளில் எழுப்பப்படவேண்டுமென்று மறைநூலில் எழுதியுள்ளதை இங்கே பதிவு செய்கின்றார். அதே வேளையில் என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் என் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும் என்கின்றார். சிலுவை என்பது ஒரு மரசிலுவை அல்ல. மாறாக நாம் வாழும் சமுதாயத்தில் அறச் செயல்கள் புரியும் ஏற்படும் சோதனைகள் - சவால்கள்- அவச்சொற்கள் அனைத்தும் தான் சிலுவையாகும் என்பதை உணர்ந்து இறையரசுப் பணியாற்றும்போது ஏற்படும் துன்பங்களை இன்தமுகத்தோடு ஏற்போம். இறை - மனித உறவில் தடம் பதிவோம்.

சுயஆய்வு :

  1. இவ்வுலகச் செல்வங்கள் மீது என் நாட்டம் யாது?
  2. அறச்செயல் செய்திட என் மனநிலை யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! எனக்கடுத்திருக்கும் வறியோர்பால் அன்பு செலுத்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org