மார்ச்-6 புதன்
திருநீற்றுப்புதன்

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 6:1-6,16-18

"மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."

அருள்மொழி :

அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.
மத்தேய 6:18

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நாம் எவ்வாறு அறச்செயல்கள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நமக்கு விளக்குகின்றார். தர்மம் செய்யும்போது வலக்கைச் செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். இறைவேண்டல் செய்யும்போது எல்லாரும் பார்க்க வேண்டுமென்று வீதிகளில் நின்றுக் கூக்குரலிட்டுச் செபிக்காதீர்கள். உங்கள் உள்ளமாகிய குடிலில் இறைமகன் வாசம் செய்கின்றார். அவரிடம் நம் ஐம்புலன்களை அடக்கி உள்ளத்துள் உறைந்து இருக்கும் சுயம்புவாகிய தூய ஆவியாரிடம் அமைதியில் அழ்கடல் தியானத்தில் உரையாடல் புரியும் போது நமது இறைவேண்டலைச் சுவைத்துக் கேட்பார். நம் இரு மனங்களும் சங்கமித்து மகிழும். அவ்வாறு செபிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நோன்பு என்பது நமக்கும் மறைவாகவுள்ள நம் இறைவனுக்கு உள்ள உறவுத் தான் நோன்பு. நாம் உண்ணும் உணவு அடுத்தவர் வறியோர் பசியை அடக்கம் சக்தியாக இருத்தல் வேண்டும். இதுவே நோன்பு.

சுயஆய்வு:

  1. நோன்பு என்றால் என்ன?
  2. மறைவாக இருக்கும் என் இறைவன் காண்கிறாரா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! எனத நோன்பு அடுத்தவர் பசி, பணி போக்கும் அருமருந்தாகிடும் வரம் தாரும்.


www.anbinmadal.org