arulvakku

மார்ச் 3 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி

லூக்கா 6:39-45

" நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். "

அருள்மொழி :

நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
லூக்கா 6:45

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தி மனிதனின் பேச்சிலிருந்து அவனது உள்ளக்கிடக்கையை அறிய முடியும் என்ற நமக்கு உணர்த்துகின்றது. கனியைக் கொண்டு மரத்தை அறிய முடியும். நமது வார்த்தைக்கு ஏராளமான வல்லமையுண்டு. ஒரு வார்த்தை ஆக்கும், ஒரு வார்த்தை அழிக்கும். பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு. ஆனால் கிறிஸ்துவின் மரணம் உயிர்ப்பு வழியாக இச்சாவின் மீது நாம் வெற்றி கொண்டுள்ளோம். நம்மை நாம் சரி செய்து புடமிட்டுப் பார்த்துவிட்டு அடுத்திருப்பவருக்கு நட்பை அளிப்போம். அன்பை வளர்ப்போம். இயேசுவின் சீடராய் திகழ்வோம்.

சுயஆய்வு :

  1. என் வார்த்தைகள் எப்படி உள்ளது?
  2. என் கண்ணிலுள்ளக் கட்டையை எடுக்க என் முயற்சி யாது?

இறைவேண்டல்:

அன்பு இறைவா! நாங்கள் உமது அன்பை உணர்ந்து எங்கள் வார்த்தைகள் அனைவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்க அருள் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org