அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 28, ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 9:2-10

இன்றைய புனிதர்

St. Romanus of Condat

புனித ரோமானு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. மாற்கு 9:7

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தோற்றம் மாறுகின்றார். பேதுரு-யாக்கோபு-யோவான் ஆகிய மூன்று சீடர்களுடன் ஓர் உயர்ந்த மலைக்குச் செல்கின்றார். அவர்கள் முன் தோற்றம் மாறினார். எந்தச் சலவைக்காரனும் வெளுக்கதமுடியாத அளவுக்கு வெண்ணிற ஒளியில் அவரது ஆடைகள் மின்னின. அங்கே மோசேவும், எலியாவும் உடன் உரையாடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ணுற்றச் சீடர் பேதுரு என்ன பேசுகின்றோம் என்று உணராத நிலையில் தன்னிலை மறந்து உங்கள் மூவருக்கும் கூடாரங்களை அமைப்போமென்று கேட்கின்ற வேளையில் மேகம் அவர்கள் மீத வந்து நிழலிட, மேகத்திலிருந்து "என் அன்பார்ந்த மகன் இவரே!" இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஒரு குரல் ஒலித்ததைக் கேட்டதும், சுற்றும் முற்றும் பார்க்க அங்கே அவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை. இதனை அடுத்து இயேசு அவர்களிடம் "இங்கு நடந்தவற்றை மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை யாருக்கும் சொல்ல வேண்டாம்" என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.

சுய ஆய்வு

  1. "என் அன்பார்ந்த மைந்தர் இவரே" என்பவரை அறிகிறேனா?
  2. இவரது குரலுக்குச் செவிசாய்க்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் இறைமகன் என்பதை நாளும் உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு