அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 27, சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:42-48

இன்றைய புனிதர்

St Gabriel of Our Lady of Sorrows

வியாகுல அன்னையின் புனித கபிரியேல்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள். மத்தேயு 5-48

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, விண்ணகத் தந்தை நம்மைப் படைத்தவர். நமது தேவைகளை அறிந்துத் தகுந்த நேரத்தில் உதவிடுவர் என்றுரைக்கிறார். அவரை நாம் இனம்காண முடியாமல் இந்த உலகச் சூழல் நம்மைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குகின்றது. எனவே நாம் தவறுகின்றோம். தந்தை தனது பிள்ளைகளை எவ்வாறு சமத்துவத்தோடு பராமாிக்கின்றாரோ அதேபோல் நாமும் பிளவுகளின்றி ஒரே குடும்பமாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இதையே இறைமகன் இயேசு நமக்குப் போதித்து வாழ்ந்தும் காட்டினார். எனவே தான் நம்மைக் கடந்து சென்று அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற நிலையைத் தந்தையாக இறைவன் காண்பது போல நம்மையும் காண அழைப்பு விடுக்கின்றார்.

சுய ஆய்வு

  1. நான் எனக்கு அடுத்திருப்பவனை எவ்வாறு அன்புச் செய்கின்றேன்?
  2. பிரதிப் பலன் பாராது அன்புச் செய்கின்றேனா?

இறைவேண்டல்

ன்பு இயேசுவே! நான் இவ்வுலகில் காணும் அனைவரையும் எனது நண்பனாக, சகோதரராக அன்பு செய்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு