அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 26, வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு.5:20-26

இன்றைய புனிதர்

St. Isabel of France

புனித இசபெல்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மத்தேயு 5-26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இன்று இந்த உலகில் எதை நாம் விதைக்கின்றோமோ அதையே மீண்டும் பெறுவோம் என்பதை அன்றைய யூத சமுதாயத்தின் இழிநிலையைப் பார்த்துச் சொல்கின்றார். இன்றும் நமக்குக் கூறுவதும் இதுவே. எப்படிஎனில் அடுத்தவர் பொருளையோ அல்லது சொத்தையோ கொள்ளையடித்துவிட்டு, அதற்குச் சமசாகக் கடவுளுக்குக் காணிக்கைச் செலுத்திச் சரி செய்து கொள்ளும் கயவர்கள் அன்றும் இன்றும் வாழ்கின்றனர். அவர்களுக்குத் தான் சொல்கின்றார். அடுத்தவரை ஏமாற்றி எந்தக் காணிக்கையும் வேண்டாம். அனைவரும் சமாதானமாக நிறைவான உள்ளத்தே எனக்கு ஏற்புடையதாகும். இல்லையேல் அந்தக் காசு கடைசிகாசுத் தீரும் வரை உமது தண்டனை நீண்டுகொண்டேபோகும் நீங்கள் விண்ணரசில் நுழைய முடியாது. நீர் எதை விதைத்தீரோ அதையே அறுவடைச் செய்வீர் என்பதைச் சுட்டிகாட்டுகின்றார்.

சுய ஆய்வு

  1. நான் வாழும் இடம் என்ன நிலையில் உள்ளது?
  2. அதனை எதிர்கொள்ள என் மனநிலை எப்படி உள்ளது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் அடுத்தவர்கள் பொருளை அல்ல, மனதைத் தொடுபவராக மாற எனக்கு வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு