அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 25, வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 7:7-12

இன்றைய புனிதர்

St. Walburga

புனித வால்பர்கா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்: தேடுவோர் கண்டடைகின்றனர்: தட்டுவோருக்குத் திறக்கப்படும். லூக்கா 7:8

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு வாய் திறந்து கேட்பவர்கள் தான் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதை விளக்குகின்றார். எப்படிஎனில் ஒரு குழந்தைப் பசிக்கு அழுதுப் பால் குடிக்கின்றது. ஆனால் ஒரு சிலர் கிடைக்கும் என்று எந்த ஒரு முயற்சியுமில்லாமல் இருப்பர். அவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? அதைப்போல் செவி வழியாகக் கேட்போரும் அதனை ஆய்வு செய்து தனக்கு எது தேவையோ அதுவே அடுத்திருப்பவருக்கும் தேவைப்படும் என்பதை உணர்கின்ற போது பெற்றுக் கொள்வர். எனவே தான் இயேசு தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றார். இரும்பு மனிதனாக இதயம் படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களைத் தொடுகின்ற வகையில் நாம் அணுகும்போது எதுவும் நமக்குக் கிடைக்கும். எனவே தான் இன்று மக்கள் தங்கள் தனி உரிமைகளுக்காகப் போராடுகின்றார்கள். அவர்களது வேண்டுகோள் நிறைவேறும்.

சுய ஆய்வு

  1. நான் தேவையான நல்லவற்றைத் தேடுகின்றேனா?
  2. தேடி அதனைப் பெற என் முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நாங்கள் தேவையானவற்றைப் பெற எமக்கு ஞானத்தையருளி வழி நடத்த வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு