அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 24, புதன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 11: 29-32

இன்றைய புனிதர்

St. Kuriakose Elias Chavara

புனித குரியாகோஸ் எலியாஸ் சாவரா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். லூக்கா 11:30

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைவாக்கினர் யோனா மானிட மகனுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றார். யோனா ஒரு குறிப்பிட்ட நினிவே மக்களின் முறையற்றச் செயல்பாடுகளின் நித்தம் அவர் மூன்று நாட்கள் திமிங்கலம் வயிற்றுக்குள் இருந்து மீண்டும் நினிவே மக்களை மீட்டெடுக்கச் சித்தம் கொண்டார். ஆனால் இயேசுவோ ஒட்டு மொத்த உலக மக்களின் மீட்பின் பொருட்டுத் தன்னையே பலியாக்கி மீண்டும் உயிர்த்தெழுந்துத் தன் மக்களை வென்றெடுத்தார். இதன் வாயிலாக அவரின் மறையுடலாக உள்ள நமது நிலை என்ன என்பதைச் சிந்தித்துத் தியானித்து அதனை நம் வாழ்வில் கடைபிடித்து அடுத்தவருக்காக நம்மையும் அர்ப்பணிக்கும் அடையாளமாகத் திகழ்வோம்.

சுய ஆய்வு

  1. நான் இயேசுவின் தியாகத்தை உணர்ந்துள்ளேனா?
  2. அதனை என் வாழ்வில் கடைபிடிக்க என் முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நின் மறையுடலாக எனைத் தேர்ந்து கொண்டு உம் உடன் பணியாளராக வரம் அருளும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு