அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 23, செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 6:7-15

இன்றைய புனிதர்

St. Polycarp of Smyrna

புனித பொலிக்கார்ப்பு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நீங்கள் அவர்களைப் போல் இருக்கவேண்டாம். ஏனெனில் நீங்கள் கேடகும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். மத்தேயு6:8

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நாம் எப்படிச் செபிக்க வேண்டுமன்று நமக்குக் கற்பிக்கின்றார். பிற சபையினரைப் போல் பிதற்ற வேண்டாம். இப்படிப் பிதற்றுபவர்கள் உணர்ச்சியானது நிரந்தரமற்றது. ஒரு சில நிமிடங்களில் அது மறைந்துபோகும். மீண்டும் பிரச்சனைத் தலைத்தூக்கும். இதனை உணராத மக்கள் ஓடோடி அலைகின்றார்கள். இவர்களிடம் ஆழ்ந்த விசுவாசம் கிடையாது. நமது தந்தை நம்மைப் படைத்துப் பராமரிப்பவர் அனைத்தையும் அறிவார். தன் பிள்ளைக்கு எது தேவை என்பதை உணர்ந்து உரிய நேரத்தில் வழங்கிடுவார். அதனைப் பெறுவதற்கு நமது உள்ளமும் எந்த அசுத்தமும் இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக நாம் தேவைகளைப் பெறுவோம். உணர்வுப்புர்வமாக நமது உள்ளத்தில் இருக்கும் தூயவரை அறியும் போது அமைதியில் அனைத்தையும் பெறுவோம்.

சுய ஆய்வு

  1. நான் எனக்கும் புதைந்துள்ள தூய ஆவியைத் அறிகின்றேனா?
  2. அவரைத் அறிய எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எனது உள்ளத்தில் இருக்கும் ஆவியானர் இனங்காண எனக்குச் சுயத் தரிசனம் செய்யும் ஆற்றலைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு