அருள்வாக்கு இன்று
பெப்ரவரி 22, திங்கள்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 25:31-46
இன்றைய புனிதர்

புனித பேதுருவின் தலைமை பீடம்
மத்தேயு 25:31-46
புனித பேதுருவின் தலைமை பீடம்
எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்... மத்தேயு 25-32
இறைமகன் மீண்டும் தான் மீட்ட மக்கள் அனைவரையும் தன் தந்தையின் அரசில் சேர்க்க மாட்சியோடு வரவிருக்கும் செய்தியே இன்றைய நற்செய்தி ஆகும். எப்படிஎனில் உலகம் படைக்கப்பட்ட நாள் முதல் தன் தந்தையின் மிகச் சிறந்த படைப்பான மனித இனம் பலுகிப் பெருகி இவ்வுலகில் எத்தகைய வாழ்வு வாழ்ந்துள்ளனர். அவர்களை மீண்டும் தனது வலப்பக்கத்தில் அமர அழைப்பு விடுக்கவே, தன்மகனை இந்த மண்ணகம் நோக்கி அனுப்பவிருக்கின்றார். அந்த நாளில் எல்லா மக்களினமும் ஒன்றிணைந்து நிற்பார். அப்போது நாம் இவ்வுலகில் எதை எல்லாம் விதைத்தோமோ அவற்றையே அப்போது அறுவடைச் செய்வோம். அதன் பலன் நிலையான நிறைவாழ்வாகும். இதனை வெளிப்பாடே இன்றைய இறைவார்த்தையின் உச்சக்கட்டமாகும். எனவே இனிமேலாவது நமது வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக்க முயல்வோம்.
அன்பு இயேசுவே! உமது வருகையின் போது நானும் செம்மறியாடு போல் வந்து உமது வலதுப் பக்கத்தில் அமலும் வரம் தாரும் ஆமென்.