அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 21, ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 1:12-15

இன்றைய புனிதர்

St. Peter Damian

புனித பீட்டர் தமியான்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். மாற்கு 1:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு,கலிலேயாவில் தம் பணியைத் தொடங்குகின்றார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்". இறைமகன் மண்ணுலகில் மரியின் வழியாகப் பிறந்து இடையர்களுக்கும், ஞானிகளுக்கும் தரிசனம் தந்து மறைநூல் அறிஞர்கள் நடுவில் 12 வயதில் தம் பணியின் நேர்மைக் கண்டுணர்ந்து ஞானத்திலும் - பக்தியிலும் வளர்ந்துத் தூய ஆவியால் திருமுழுக்கு யோர்தானில் பெற்று நாற்பது நாட்கள் நோன்பிருந்துத் தன் பணிவாழ்வை ஏழை எளியோருக்காய்ச் செய்து இறை மனித உறவில் சங்கமித்துத் துன்பங்கள் பலபட்டு அவரது அறச்செயல்களைக் காணமுடியாததோர் அவரை அடித்துச் சிலுவையில் அறையப்பட்டு மரித்த மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதே நற்செய்தியை நம்புங்கள். மனம் மாறுங்கள் என்று அவரே அழைப்பு விடுக்கின்றார்.

சுய ஆய்வு

  1. காலம் நிறைவேறிவிட்டதை உணர்கிறேனா?
  2. இறையாட்சி நெருங்கி விட்டதை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது அழைப்பை ஏற்று மனம் மாறிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு