அருள்வாக்கு இன்று

பெப்ரவரி

இன்றைய நற்செய்தி

லூக்கா 5:27-32

இன்றைய புனிதர்

st. Francisco Marto St. Jacinta Marto

புனித பிரான்சிஸ்கோ புனித ஜெசிந்தா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் வருகை எத்தகையோருக்கு என்பதை முன் வைக்கின்றார். நேர்மையானவர்களை அல்ல, பாவமுற்று அடுத்தவர்களைக் கொடுமைபடுத்தி வஞ்சகத்தோடு வாழும் பாவியைத் தான் மனம் மாற்றிட வந்தேன் என்கின்றார். எனவே நாமும் சமுதாயத்தில் பாவச் சூழலில் வாழும் சகோதரர் சகோதரிகளை இனம் காண்போம். அவர்களுக்கு எளிமையாகப் பேசி மனம் மாற அழைப்போம். தவறிப் போகின்ற ஆடுகளையும் இனம் காண்போம். விசுவாசமின்றி அலைவோரைத் தேடிக் கண்டுபிடித்து நமது கத்தோலிக்கக் கொட்டிலில் அடைப்போம். நாமும் நம்மை மாற்றியமைப்போம். எதையும் ஏற்ககூடிய மனப்பக்குவம் அடைவோம். இதையே இறைமகன் விரும்புகின்றார்.

சுய ஆய்வு

  1. நான் மாறி அடுத்தவரையும் மாற்ற எனது முயற்சி யாது?
  2. அதற்கான தகுதியை நான் பெற்றுள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்னை உமக்கு உகந்தவனாக மாற்ற உம் பணியாற்ற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு