அருள்வாக்கு இன்று
பெப்ரவரி 19, வெள்ளி
இன்றைய நற்செய்தி
மத்தேயு 9:14-15
இன்றைய புனிதர்

புனித கான்ரட்
மத்தேயு 9:14-15
புனித கான்ரட்
அதற்கு இயேசு அவர்களை நோக்கி "மணமகன் தங்களோடு இருக்கும் வரை மண விருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?"
இன்றைய நற்செய்தியில் இயேசு, நோன்பு பற்றி விளக்கம் அளிக்கின்றார். இறைமகன் உடனிருப்பை உணர்த்துகின்றார். நோன்பு என்றால் ஐம்புலன்களை அடக்கி விரதம் பூண்டுத் தன்னை வருத்திக் கொண்டிருப்பார்கள் சிலர். ஆனால் அவர்கள் உள்ளமோ இறைவனை விட்டு வெகு தொலைவில் இருக்கும். இறை உறவானது பாவச் சுமையால் அறுபட்டு இருக்கும். அந்த நிலையில் அவர்கள் வெளிவேடமாக இருக்கும் நோன்புப் போலியானது. ஆனால் இங்கு இறைமகன் உடனிருக்கும் போது நோன்புத் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றார் இறை மகன் இயேசு. எனவே நாமும் மனதளவில் இறைவனோடு ஒன்றித்து ஒறுத்தல் செய்யும் போது நிறைவு பெறுகிறோம்.
அன்பு இயேசுவே! உணர்வுப் பூர்வமான மனதுடன் உம்மை அன்புச் செய்யவும் பணியாற்றவும் வரம் தாரும். ஆமென்.