அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 18, வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 9:22-25

இன்றைய புனிதர்

St. Simon

புனித சைமன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"இங்கு நிற்பவர்களுள் சிலர் இரையாட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்கள் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையாட்சியின் வருகையைத் தரிசிக்கும் பாக்கியம் அவருடன் இருந்த சிலருக்குக் கிடைக்கும் என்று சான்றுப் பகருகின்றார். ஆம் அன்பர்களே! அன்றும் இன்றும் இறைமகனின் நற்செய்திப் பணியைச் சமுதாயத்தில் ஊடுருவிச் சென்று சாதி-சமயம்-இனம் காணாதுப் பணிச் செய்யும் போது நாமும் இறையாட்சியை இந்த மண்ணில் காணலாம். எங்கும் சமத்துவம் சகோரத்துவம் ஓங்கி நிற்கும். இல்லாமை என்ற சொல் மறைந்து நிற்கும். இதையே இயேசு இறையாட்சி என்று வெளிப்படுத்துகின்றார். இந்தத் தரிசனம் நாமும் காண்போமா?

சுய ஆய்வு

  1. இறையாட்சி என்றால் என்ன?
  2. இதனை அறிந்து ஊன்றிட என் பங்கு என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! இந்த மண்ணகம் உமது ஆட்சியைப் பெற்றுச் செம்மையாக வாழ வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு