அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 17, திருநீற்றுப் புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 6:1-6, 16-18

இன்றைய புனிதர்

Seven Founders of the Servite Order

மரியின் ஊழியர் சபை நிறுவிய புனிதர் எழுவர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம், மறைவாயிருக்கும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைமாறு அளிப்பார்."

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தர்மம் செய்வதைப் பற்றி விளக்குகின்றார். தர்மம் செய்கின்ற கையும், மனமும் தான் இதை அறிய வேண்டும். அடுத்தவர் அறியும் வண்ணம் செய்யக்கூடாது. ஏனென்றால் தர்மம் பெறுபவன் கூனிகுறுகிப் பெறக்கூடாது. எனவே தான் தந்தை மட்டும் நீங்கள் செய்யும் தர்மத்தை அறிந்து அதற்கான பரிசை நமக்கு அளிப்பார் என்பதே இதன் மையக்கருத்து ஆகும். எனவே இதனை ஏற்போம்.

இன்று தவக்காலத்தின் தொடக்கநாள். இக்காலத்தின் அருமைகளை உணர்ந்து நாம் தவமுயற்சிகளில் ஈடுப்பட்டு மனமாற்றத்தையும் மன்னிப்பையும் நிறைவாய்ப் பெற்றுக் கொள்வோம். தவம்+தர்மம்+மனமாற்றம் அறிவோம் வாரீர்!

சுய ஆய்வு

  1. நான் செய்யும் தர்மம் அடுத்தவர் அறியாமல் செய்கின்றேனா?
  2. எப்படிச் செய்வது என்பதை அறிய முயற்சிக்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே!, நான் அடுத்தவர் அறியாமல் தர்மம் செய்யவேண்டுமென்ற மனதினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு