அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 16, செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மாற்கு 8:14-21

இன்றைய புனிதர்

St. Onesimus

புனித ஒனிசிமஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? மாற்கு 8:18

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, பரிசேயர் ஏரோதியரின் புளிப்பு மாவுப் பிரச்சனையை இங்கே பதிவு செய்கின்றார். இதை உண்பது? எதை முடிப்பது? என்று புலம்பும் உறுதியற்ற உள்ளங்களைப் பார்த்து இறைமகன் சாடுகின்றார். கிறிஸ்துவின் உடனிருப்பை உணராதபடி நமது தீய எண்ணங்கள் தீய சக்திகள் நம்மைக் கட்டிபோடும் நிலையில் தான் நாம் பலவற்றைப் பற்றிக் கவலைக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்திடுவோம். இறைவார்த்தையில் நம்பிக்கைக் கொண்டவர்களாய் இறை-மனித உறவில் சங்கமித்து இறைவனில் அனைவரும் ஒன்றே என்ற மனநிலையில் சாதி-சமயம் கடந்து இறையரசின் விழுமியங்களை நமதாக்கிடும்போது இறைமகனின் உள்ளத்தில் இணைந்திடுவோம். அவரது மாட்சியை முகமுகமாய்த் தரிசிக்கும் பேற்றை அடைவோம். இதுவே இறைமகன் நமக்கு முன்வைக்கும் அடையாளம்.

சுய ஆய்வு

  1. இறைமகனின் உடனிருப்பை உணர்ந்திட என் முயற்சி யாது?
  2. என் உள்ளத்தில் இறைமகனோடு ஒன்றிக்க எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது செயல்பாடுகள் அனைத்தும் என்னில் நிறைவேறும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு