அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 15, திங்கள்

இன்றைய நற்செய்தி

மாற்கு 8:11-13

இன்றைய புனிதர்

St. Faustinus and Jovita

புனித பவுஸ்தினா மற்றும் ஜோவிட்டா St. Faustinus and Jovita

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் பெருமூச்சுவிட்டு, "இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். மாற்கு 8:12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவு வழங்கி மீதி ஏழு கூடைகள் குவித்த பின்பும் இந்த நெறிக் கெட்டத் தலைமுறைகள் இறைமகனைப் பார்த்து "வானத்திலிருந்து எதாவது ஓர் அடையாளம் காட்டும்" என்றதை வன்மையாகக் கண்டிக்கின்றார். இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. காரணம் கண்ணிருந்தும் கண்டவற்றையும், தெரிந்தவற்றையும், அறச்செயல்கள் அனைத்தையும் உய்த்துணரும் திறன் இல்லாதவர்கள் தான் அடையாளம் கேட்பர் என்பதைப் பதிவு செய்கின்றார். எந்தவித ஆரவாரம் இல்லாமல் சமுதாயத்தில் நலிந்துக் கிடந்த மானிடரை நாடிச் சென்று அவரவர் தேவைகளைப் பூர்த்திச் செய்து தன் இரக்கச் செயல்களின் இலக்குத் தான் கிறிஸ்து வருகையின் உச்சக்கட்டம் என்பதை நாம் உணர்ந்து வாழ்வோம் வாரீர்.

சுய ஆய்வு

  1. அடையாளம் கேட்பவர்கள் எத்தகையோர் அறிகிறேனா?
  2. இறைமகனின் அறச்செயகள் உணர்த்தும் செய்தி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது பிறப்பின் நோக்கமறிந்து உம் பணி ஆற்றம் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு