அருள்வாக்கு இன்று
பெப்ரவரி 14, ஞாயிறு
இன்றைய நற்செய்தி
மாற்கு 1:40-45
இன்றைய புனிதர்

புனித சீரில், புனித மேதோடியஸ்
மாற்கு 1:40-45
புனித சீரில், புனித மேதோடியஸ்
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை உம்மால் நீக்க முடியும்" என்று முழங்கால்படியிட்டு வேண்டினார். மாற்கு 1:40
இன்றைய நற்செய்தியில் இயேசு விரும்பினால் அவன் தொழுநோய் குணமாகும் என்று நம்பிய அவனே பேறு பெற்றவனாகின்றான். காரணம் இயேசுவின் "மாட்சிமை" அவனது நோய் விலகியதற்குச் சான்று. எனவே அன்புச் சகோதரர்களே! நாம் ஒருவருக்காக எந்தப் பணியைச் செய்தாலும் முழுமனதோடு விரும்பி இயேசுவின் பெயரால் செய்யும் போது செபம் பெற்றுக் கொள்பவனும் முழுநம்பிக்கையோடு பெற்றுக் கொள்ளும்போது அங்கே பல புதுமைகள் நடைபெறும். இந்த இறைசெயல் தான் நமக்கு ஆற்றலைத் தருகின்றது. எனவே நாமும் ஏற்போம்.
அன்பு இயேசுவே! நீர் என்னுள்ளும் உமது வார்த்தைகள் என் வாழ்விலும் செயலிலும் ஒருமனபட்டுப் பணியாற்ற வரம் தாரும். ஆமென்.