அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 13, சனி

இன்றைய நற்செய்தி

மாற்கு 8:1-10

இன்றைய புனிதர்

St. Catherine de Ricci

புனித கேத்தரீன் டி ரிசி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவு கொள்கிறேன். ஏற்கனவே மூன்று நாட்களாக இவர்கள் என்னுடன் இருக்கின்றார்கள். உண்பதற்கும் இவர்களிடம் ஒன்றுமில்லை". மாற்கு 8:2

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னுடன் இருந்த மக்கள் கூட்டத்தின் மீது பரிவு கொள்கின்றார். காரணம் மூன்று நாட்களாக அவர்கள் இறைமகனோடு இருந்தார்கள். அவர்களுக்கு ஆன்மப் பசி அடங்கியது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு தான் உடல் பசி தெரிவதை மக்கள் உணரவில்லை. ஆனால் இறைமகன் அவர்கள் மீது மனமிரங்கிப் பரிவு கொள்கின்றார். எனவே அவர்களுக்கு 7 அப்பங்களையும் சிறு மீன்களையும் இறைப் புகழ் கூறி அனைவருக்கும் பகிர்ந்து உணவளிக்கின்றார். மொத்தம் நான்காயிரம் உண்டும் மீதிக் கூடைகளில் சேர்க்கின்றனர். ஆம் சகோதரர்களே இறைமகன் பரிவானது சிறு துளிப் பெருவெள்ளம். மனம் உண்டானால் மார்க்கம் கிடைக்கும் என்று உணர்த்தும் புதுமையாக அமைந்தது உள்ளது. எனவே நாமும் இதனை ஏற்போம்.

சுய ஆய்வு

  1. நான் பகிர்ந்து அளிக்க மனம் கொண்டுள்ளேனா?
  2. அதற்கான முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் அடுத்தவருக்கும் இருப்பதைப் பகிர்ந்து வாழும் மனதினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு