அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 12, வெள்ளி

இன்றைய நற்செய்தி

மாற்கு 7:31-37

இன்றைய புனிதர்

 St.Julian the Hospitaller

புனித ஜூலியன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்றார்.மாற்கு 7:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு காது கேளாது வாய் திக்குப் பேசுபவரைக் குணப்படுத்துகின்றார். அஃதாவது அவனது காதும் நாவும் எதையும் கேட்க முடியாமலும் தெளிவாகப் பேச முடியாமலும் பல கட்டுகளால் மூடபட்டிருந்தன. அந்தச் சூழலில் இப்படிபட்டவர்களை யூத இனம் நீ பாவம் செய்தாய். அதற்காகக் தான் நீ ஊனமானாய் என்று குறைச் சொல்லும் நிலை. அந்தச் சூழலில் இயேசு அவனது காதுகளில் விரலை விட்டு அவனது நாவில் உமிழ்நீரைத் தடவி அவனது தீக்கட்டுகளை அவிழ்க்கின்றார். "எப்பத்தா" என்றால் திறக்கப்படுக. உடனே அவன் பேசினான். ஆம் அன்பர்களே இன்றும் நம்மிடையே அனேகர் பேசமுடியாத நிலைக் கேட்க முடியாத நிலை அஃதாவது இறைவார்த்தையைப் படித்தும் எடுத்துச் சொல்ல முடியாத நிலை. கேட்டும், கேட்க முடியாத நிலை. இப்படிபட்டவர்களுக்கும் இயேசுவின் பெயரால் திறக்கபடும் என்று விசுவாசத்தோடு அறிக்கையிடுவோம். வாரீர்.

சுய ஆய்வு

  1. நான் இறைவார்த்தையின் பொருட்டு நான் எடுக்கும் முயற்சி யாது?
  2. அதனைக் கேட்க என் செவிகள் தயாரா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தையைக் கேட்கவும் இறைவாக்கு உரைக்கவும் எனக்கு நாவண்மையைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு