அருள்வாக்கு இன்று
பெப்ரவரி 11, வியாழன்
இன்றைய நற்செய்தி
மாற்கு 7:24-30
இன்றைய புனிதர்

புனித லூர்து அன்னை
>,
மாற்கு 7:24-30
புனித லூர்து அன்னை
இயேசு அவரைப் பார்த்து "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல." மாற்கு 7:27
இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து யூதரல்லாத கானானேயப் பெண்ணின் விசுவாசத்தைச் சோதிக்கின்றார். எப்படி எனில் அன்றும் சரி இன்றும் சரி நாம் கடந்து போவதில்லை. மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் நம்மையும் குறைச் சொல்வார்கள். நாமும் அவர்களது வழிபாடுகளைக் குறைச் சொல்லிகொண்டே இருப்போம். காரணம் மனிதன் என்பவன் கடவுள் படைப்பில் ஒன்று தான். பிரிவுகள் பல மனிதர்களால் உண்டாக்கபட்டவை. இதனை உணர்வதில்லை. எனவே தான் அன்று இருந்த யூத மதத்தினருக்கும் இன்று நமக்கும் அந்த வேறுபாட்டினைப் பிரித்துக் காட்டுகின்றார். பிள்ளைகளுக்குப் போடுவதை நாய்களுக்குப் போட முடியுமா? நாய்கள் என்று அன்று பிரித்துப் பார்த்தவர்கள் பிற மதத்தினரை அவர்கள் பார்த்த விதம். எனவே கனானேயப் பெண்ணை நோக்கித் தொடுக்கின்றார். எனவே அவளது விசுவாசத்தை உறுதியை இன்றும் நமக்கும் சான்றாக விளக்குக்கின்றார். ஏற்போம்.
அன்பு இயேசுவே! மனிதன் என்பவன் இறைவன் படைப்புத் தான் என்று வாழும் வரம் தாரும். ஆமென்.