அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 10, புதன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 7:14-53

இன்றைய புனிதர்

St. Scholastica

புனித ஸ்கொலாஸ்திக்கா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

வெளியிலிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் திட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே தீட்டுப்படுத்தும். மாற்கு 7:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தீட்டு எது என்பதை அன்றும் இன்றும் உள்ளவர்களுக்கு விளக்குகின்றார். அதாவது நாம் எதை ஏற்றுக்கொண்டாலும் நல்லவையே. நாம் தரும் தீயவையை விட்டு ஒழித்தல் நல்லது. ஆனால் அடுத்தவரை ஒருவர் தன் அகத்திலிருந்து புறப்படும் தீச்சொற்களால் தான் மாசுபடுகின்றனர். அது தான் தீட்டாகும். கைகளைக் கழுவி உண்பதால் மட்டும் தீட்டு மறைவதில்லை. அடுத்தவர் மனம் புண்படச் செய்யாதவையே நலம் தரும் வார்த்தைகளாகும் என்கின்றார். எனவே நாம் மற்றவரின் வார்த்தைகளை எற்று நடப்போம்.

சுய ஆய்வு

  1. நான் அடுத்தவரை எப்படி நடத்துகின்றேன்?
  2. அடுத்தவருக்கு நான் தரும் மதிப்பு என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! பகட்டிற்காக மட்டுமன்றித் தூய நல்மனதோடு அடுத்தவரை அன்புச் செய்யும் மனம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு