அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 9, செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மாற்கு 7:1-13

இன்றைய புனிதர்

St. Miguel Febres Cordero

புனித மிகுவேல் பைபாஸ் காட்டீரோ

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்" என்று அவர்களிடம் கூறினார். மாற்கு 7:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் தீட்டான கைகளுடன் உண்பதாகப் புறம் கூறியப் பரிசேயரைப் பார்த்து அவர்கள் மூதாதையர் மரபைப் பற்றிக் கொண்டு கடவுளின் கட்டளைகளைப் புறக்கணித்து விடும் போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றார். ஆம் மாதா பிதா குரு தெய்வம் உம் தாய் தந்தையரை மதித்து நட, தாய்தந்தையரைச் சபிப்போர் கொல்லப்படவேண்டும் என்ற கட்டளையை மறந்துப் பெற்றவர்களைத் துச்சமாக நடத்துவது, பரம்பரைப் பரம்பரையாக எங்கள் குல வழக்கம் என்று எதையாவதைப் பற்றிக் கொண்டு அதற்காகப் போராடுவதை இங்கே சுட்டிக்காட்டுகின்றார். வெளிவேடங்களைக் கலைத்து உண்மை நிலையை உணர்ந்து நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகள் ஆகிய 1 ஒரே கடவுள் 2. உன்னை அன்பு செய்வது போல உன் அயலானைச் செய்து வாழ் என்பவையே நமக்கு உணர்த்தும் கடவுளின் வார்த்தை என்பதை உணர்வோம்.

சுய ஆய்வு

  1. இறைவாக்கு தான் நான் பெற்றுக் கொண்ட அறிவு- அறிகிறேனா?
  2. இறைவாக்கின்படி நான் வாழ எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தை என் வாழ்வின் அடிதளமாகிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு