அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 8, திங்கள்

இன்றைய நற்செய்தி

மாற்கு 6:53-56

இன்றைய புனிதர்

St. Jerome Emiliani

புனித ஜெரோம் எமிலனி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தார்கள். மாற்கு 6:56

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் நோயுற்றவர்கள் அனைவரும் இயேசுவின் மேலுடையின் விளிம்பைத் தொட்டாலே குணம் பெறுவோம் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு வந்து தொட்டுக் குணம் பெறுகின்றனர். ஆம் இறைமக்களே இன்றும் தூய எண்ணத்தோடு அடுத்தவரின் துயர் துடைக்கக் இறைமகனை உள்ளத்திலும் வாழ்விலும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இறைத்தன்மை நம்மில் மிளிர இறை வாரத்தையின் வழி நம் வாழ்வு என்ற கொள்கையோடு வாழ்வோமானால் நாமும் இயேசுவின் இருத்தலை நம்மில் உணர்வோம். நாம் பெற்றுக் கொண்டதை அடுத்தவருக்கும் பரிந்தளிப்போம் என்ற விசுவாசத்தில் நிலைத்திடுவோம்.

சுய ஆய்வு

  1. நான் என்றும் உன்னோடு என்ற வார்த்தைகள் என்னில் ஒலிக்கின்றதா?
  2. அந்த ஒலியைக் கேட்க எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தையின்படி வாழ எனக்கு வரும் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு