அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 7, ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 1:29-39

இன்றைய புனிதர்

St. Richard

புனித ரிச்சர்டு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"அவரைக் கண்டதும் எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்" என்றார்கள். மாற்கு 1:37

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களுடன் நோயாளிகளைக் குணப்படுத்திவிட்டுத் தனிமையில் சென்றார். அவரைத் தேடி அனேகர் வருகின்றார்கள். அவர்களது வருகையைப் புரிந்து கொண்ட சீடர்களும் இயேசுவை நோக்கிச் செல்கின்றார்கள். அவரது உடனிருப்பை மக்களும் சீடர்களும் ஆவலோடு விரும்புகின்றார்கள். காரணம் அவரது இருப்பு அனைவருக்கும் ஓர் அருமருந்தாய் அமைந்திருந்தது. எனவே தான் அன்று நாடினார்கள். ஆம் அன்பர்களே நாமும் இன்றைய பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டுமானால் தூய ஆவியாரின் உடனிருப்பு நமக்கு அவசியம் தேவை. இதனை உணர்ந்து இறைவார்த்தையில் பேசியுள்ள இறைவனோடு ஒன்றிருத்திருக்க வழியினைத் தேடுவோம். வாரீர்.

சுய ஆய்வு

  1. நான் தேடிச் செல்கின்றேனா இயேசுவை?
  2. தேடிப் பெற்றுக் கொள்ள எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்றும் உமது இருத்தலைக் கண்டுணர வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு