அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 6, சனி

இன்றைய நற்செய்தி

மாற்கு 6:30-34

இன்றைய புனிதர்

St. Paul Miki

புனித பவுல் மீகி தோழர்கள்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் கரையில் இறங்கிய போது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். மாற்கு 6:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் சீடர்களைத் தொடர்ந்து ஓடிவருவதைக் காண்கின்றார். அவர்கள் பலர் பலவித வேதனைகளால் தொடர்ந்து வாடுவதைக் கண்டதும், அவர்கள் பரிவுக் கொள்கின்றார். யாருமில்லாத ஆடுகளைபோல அலைகின்றனரே, இத்தையோருக்காகத் தானே இந்த மண்ணுலகிற்கு வந்தார் எனவே அவர்களது தேவைகளை நிறைவு செய்யச் சித்தம் கொண்டார். ஆம் அன்பர்களே இன்றும் அனேகர் ஆயனில்லாத ஆடுகளைப் போல் இங்கும் அங்கும் அலைகின்றனர். நிலையான நிறை வாழ்வு உண்டு என்பதை உணரமுடியாத நிலையே. எனவே அவர்களை நிறைவாழ்வுப் பெற இறைவனை மன்றாடுவோம்.

சுய ஆய்வு

  1. தவறிப் போகின்றவர்களைத் தேடுகின்றேனா?
  2. அல்லது நானே தடுமாறுகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது அருளை உணர முடியாதவர்கள் சிதறி ஓடுகின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு