அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 4, வியாழன்

இன்றைய நற்செய்தி

யோவான் 12:20-32

இன்றைய புனிதர்

St. John de Britto

புனித அருளானந்தர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். யோவான் 12:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, கோதுமை மணி மண்ணில் மடிந்தால் தான் அது மிகுந்த விளைச்சளைக் கொடுக்கும் என்ற தன் வருகை-போதனை-பாடுகள்-மரணம்-உயிர்ப்பு ஆகிய கருப்பொருளை உள்ளடக்கிக் கோதுமைமணிக்கு உவமையாகச் சான்று பகர்கின்றார். அவ்வாறே நாமும் அடுத்தவருக்காகத் நம்மையே தியாகம் செய்யும்போது மிகுந்த பலனை நாம் அடைவோம். அதற்கான வழிமுறைகளை நமக்கு இறைவார்த்தை வாயிலாகப் போதிக்கின்றார். சுயநலம் துறந்துப் பொதுநலம் காண்பதே இறைத்திட்டம். ”தான்” என்ற நிலையிலிருந்து இறங்கி வந்து எல்லோருக்கும் எல்லாம் ஆனேன் என்ற பவுலடியாரின் வரிகள் இறைமகனின் தாக்கத்தைத் தீர்க்கும் பானமாகும். எனவே நாமும் இறைமகன் விரும்பும் நிலைவாழ்வை அடையும் பொருட்டு, நாம் வாழும் காலத்தில் அடுத்தவரின் நலனுக்கே என்று வாழ்வோம்.

சுய ஆய்வு

  1. எனது வாழ்வைப் பொருட்டாகக் கருதாமல் பணிச் செய்கிறேனா?
  2. நிலை வாழ்வின் மேன்மை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் அடுத்தவரின் நலனுக்காக வாழும் பேற்றினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு