அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 3 புதன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 6:1-6

இன்றைய புனிதர்

St. Blaise

புனித பிளாசியுஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்" மாற்கு 6:1-6

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வல்ல செயல்களையும் ஞானத்தையும் கண்டு வியப்புற்றனர். காரணம் இவர்கள் இறைமகனை மெசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. மெசியா இறைமகன் என்பதை அன்றே அவர்களுக்கு உணர்த்தப்ட்டிருந்தால் அவருடைய வல்ல செயல்களைக் கண்டு வியப்புற்று இருக்கமாட்டார்கள். பாவிகளை மீட்க வந்தவர் தான் என்பதை அவர்கள் உணராததால் தான் இறைமகன் சிலுவைச் சாவை ஏற்குமளவுக்குத் துன்பப்பட நேர்ந்தது. எனவே நமக்கு நல் போதனைகளை அளித்த இறைமகன் நம்மை மனம் திருந்தி வாழ அழைக்கின்றார். அவரது வல்லமை-ஞானம் நம்மிலும் ஒளிர வேண்டுவோம்.

சுய ஆய்வு

  1. நான் இறைவார்த்தையில் நம்பிக்கைக் கொண்டுள்ளேனா?
  2. எனது வாழ்வில் கடைப்பிடிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது ஞானத்தையும் அருளையும் தர வேண்டி மன்றாடுகிறேன். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு