அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 2 செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 2:22-40

இன்றைய விழா

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன" லூக்கா 2:30-31

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசுவை காணிக்கையாக்கும் போது நீதிமான் சிமியோன் எதிர் காலத்தில் மக்களின் துயர் அகற்றும் மீட்பர் இவர் தான் என்பதை அவரது கண்கள், குழந்தையின் 40-ஆம் நாளிலேயே கண்டுவிட்டதை முக்காலத்திற்கும் முத்திரை பதிக்கின்றார். ஏனென்றால் அவர் முற்றிலும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார். இவர் வாயிலாக இறைவனின் மாட்சியை குழந்தை பாலகனில் மிளிர்ந்தது. எனவே இறைமக்களாகிய நாம், இறைவன்பால் நம்மையே முழுமையாகக் கையளிக்கும் போது, நம்மிலும் இறையருள் மிளிரும் என்பதை விசுவசிப்போமாக.

சுய ஆய்வு

  1. நான் குழந்தை இயேசுவை போல மாற என்ன செய்கிறேன்?
  2. அதற்காக நான் ஏற்கும் துயரம் என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மை பிறரின் துன்பத்தில் காணும் போதெல்லாம் அவர்களுக்கு உதவும் நல்மனம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு