அருள்வாக்கு இன்று

பெப்ரவரி 1 திங்கள்

இன்றைய நற்செய்தி

மாற்கு 5:1-20

இன்றைய புனிதர்

St-Henry-Morse

புனித ஹென்ரி மோர்ஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங்கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். மாற்கு 5:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பல விதப் பேய்களின் கூட்டம் நிறைந்து பிடித்திருந்த ஒருவனைப் பார்த்து நீ என்னைப் பின் தொடர வேண்டாம். நான் உன் நிலையைப் பார்த்து உன்னைக் குணப்படுத்தியதையும் உன்னிடமிருந்து வெளியேறியப் பல வகைத் தீய ஆவிகளையும் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவியும் என்று கூறினார். ஆம் இறைமக்களே! நாம் எந்நிலையிலும் இருப்பின் நமது ஆண்டவர் இயேசுவின் இரக்கம் நம்மீது பொழியப்படும் போதும் நமது ஒருமித்த விசுவாசம் அவரில் இணையும் போது கண்டிப்பாக நாமும் எவ்விதச் சோதனைகளில் கட்டுண்டு கிடந்தாலும் கண்டிப்பாக இயேசுவால் மீட்புப் பெறுவோம் என்று உணர்வோம்.

சுய ஆய்வு

  1. இயேசு என்னை எந்நிலையிலும் மீட்பார் என்பதை உணர்கின்றேனா?
  2. அதற்கான ஆயத்தம் என்னிடம் உள்ளதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் எனக்குள்ளும், நான் உமக்குள்ளும் இணையும் வரம் அருளும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு