arulvakku

பிப்ரவரி 29 சனி

இன்றைய நற்செய்தி:

லூக்கா 5:27-32

" பாவிகளையே மனம் மாற அழைக்கவந்தேன் "

அருள்மொழி:

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்கவந்தேன்
லூக்கா 5:-32

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் வருகை எத்தகையோருக்கு என்பதை முன் வைக்கின்றார். நேர்மையானவர்களை அல்ல, பாவமுற்று அடுத்தவர்களைக் கொடுமைபடுத்தி வஞ்சகத்தோடு வாழும் பாவியைத் தான் மனம் மாற்றிட வந்தேன் என்கின்றார். எனவே நாமும் சமுதாயத்தில் பாவச் சூழலில் வாழும் சகோதர சகோதர்களை இனம் காண்போம். அவர்களுக்கு எளிமையாகப் பேசி மனம் மாற அழைப்போம். தவறிப் போகின்ற ஆடுகளையும் இனம் காண்போம். விசுவாசமின்றி அலைவோரைத் தேடிக் கண்டுபிடித்து நமது கத்தோலிக்கக் கொட்டிலில் அடைப்போம். நாமும் நம்மை மாற்றியமைப்போம். எதையும் ஏற்ககூடிய மனபக்குவம் அடைவோம். இதையே இறைமகன் விரும்புகின்றார்.

சுயஆய்வு :

  1. நான் மாறி அடுத்தவரையும் மாற்ற எனது முயற்சி யாது?
  2. அதற்கான தகுதியை நான் பெற்றுள்ளேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் என்னை உமக்கு உகந்தவனாக மாற்ற உம் பணியாற்ற வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org