arulvakku

பிப்ரவரி 27 வியாழன்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 9:22-25

" "ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" "

அருள்மொழி:

""ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" .
லூக்கா 9:25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இவ்வுலகச் சொத்துக்கள் அழியக் கூடியவை அழியாச் சொத்து எது என்பதை நமக்கு உணர்த்துகின்றார். இவ்வுலகம் நிலையற்றது. மனிதனின் பயணம் புறப்பட்ட இடத்திற்கே அவனது பயணம் மீண்டும் போய்ச் சேர்கின்றது. எப்படி எனில் மனிதனைப் படைத்த இறைவன் அவனை ஒரு கைபிடி மண்ணால் தான் படைத்து அவருடைய என்றும் அழியா ஆவியைத் தான் ஊதி இவ்வுலகில் உலவ விட்டார். பலுகிப் பெருகிப் பூமியில் வாழ்கின்றான். அவன் பிறர்க்கும் கொண்டு வந்தது. தன் பெற்றோர் வழி உறவின் அடையாளமாக மனித உடலையும் இறைவன் கொடுத்த அழியா ஆன்மாத் தொன்றுத் தொட்டு மனிதன் இவ்வுலகில் பெற்று வாழ்கின்றான். இந்த உலகம் தான் நிலை என்று நம்பித் தவறான பாதையிலும் பொருள் சேர்க்கின்றான். ஆனால் நிலையாக வாழும் ஆன்மாவை மறந்து விடுகின்றான். மண்ணால் உண்டான உடல் மீண்டும் மண்ணுக்கே சென்று விடுகின்றது. இந்த உலகில் என்ன அறப்பணிகள் செய்தானோ அதுவே இறைவனடிச் சேர்கின்றது. எனவே அவனது நிலைச் சற்றுச் சிந்தியும்.

சுயஆய்வு :

  1. நான் உலகினை எவ்வாறு புரிந்துள்ளேன்?
  2. அழியாச் சொத்தை உணர்ந்துள்ளேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நீர் காட்டிய அழியாச் சொத்தில் நான் வந்து சேரும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org