arulvakku

பிப்ரவரி 25 செவ்வாய்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 9:30-37

"கடைசியானவராகவும் தொண்டாராகவும் இருக்கட்டும். "

அருள்மொழி:

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.
மாற்கு 9: 35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகின்ற நிலையில் இருந்தவர்களை நோக்கி முதன்மை என்பது அவர்களது அந்தஸ்தையோ, பட்டம் பதவியையோ பொருத்து அல்ல. ஏழை எளியவர்களின் துன்பத் துயரங்களில் பங்கெடுத்து அவர்களைச் சம நிலைக்குக் கொண்டு வருபவர்களே முதல்வராகக் கருதப்படுபவர். எனவே நமக்கு இந்த இறைவார்த்தையின் வாயிலாக அழைப்பு விடுக்கின்றார். நாமும் இன்றைய வறியோரில் நமது பணிச் சிறக்க நம்மைத் தூய ஆவியாரில் இணைந்து ஆற்றலோடு பணியாற்றப் புறப்படுவோம் வாரீர்.

சுயஆய்வு :

  1. நான் என்னையே தாழ்த்தி மற்றவருக்குப் பணியாளராக விரும்புகிறேனா?
  2. அதனை மேற்கொள்ள எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் உனது மக்களுக்குப் பணியாற்றும் ஆற்றலை எனக்குத் தாரும். ஆமென்.


www.anbinmadal.org