arulvakku

பிப்ரவரி-24 திங்கள்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 9:14-29

" நம்புகிறேன், என் நம்பிக்கையின்மையை நீக்கும் "

அருள்மொழி:

உடனே அச்சிறுவனின் தந்தை "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று கூறினார்.
மாற்கு 9: 24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் தீய ஆவிப் பிடித்தவனைக் குணப்படுத்துகின்றார். அவனது தந்தையின் நம்பிக்கையைச் சோதித்தறிந்துப் பிறகு அச்சிறுவனின் நீண்டக் காலத் தீய ஆவியை விரட்டுகின்றார். ஆம் சகோதர்களே! நாம் இன்றும் நமக்குள் இறைமகன் இருக்கின்றார். நாம் பெற்றுக் கொண்ட அருட் சாதனங்களால் தூய ஆவியானவர் நம்மில் உறைந்து இருக்கினறார். அவரை அகத்துக்குள் சென்று சுயதரிசனம் செய்வோமா? புற உலக மாயைகளைக் களைவோமா? அப்போது தான் நம்மில் உறைந்திரும் ஆவியார் எழுந்து ஜொலிப்பார். நாமும் கடந்து சென்று பணியாற்ற ஆற்றல் பெறுவோம் என்று ஆழ்ந்த நம்பிக்கையில் வலம் வருவோம்.

சுயஆய்வு :

  1. நான் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டுள்ளேனா?
  2. அப்படியானால் என் தூய ஆவியாரை இனம் காண எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் பெற்றுக்கொண்ட அருட் சாதனங்கள் வழியாகக் இணைந்த ஆவியார் என்னில் எழுந்து ஜொலிக்க வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org