arulvakku

பிப்ரவரி 23 ஞாயிறு

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 5:38-48

""உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" "

அருள்மொழி:

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்
மத்தேயு 5:48

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்று கூறப்பட்டிருப்பதை நீங்கள் ஏற்காதீர்கள். உங்களை வலக்கன்னத்தில் அறைவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்வோருக்காக மன்றாடுங்கள். நீங்கள் இவ்வாறு செய்யும்போது மறைவாயுள்ள வானகத் தந்தை உங்களுக்கு மிகுந்த கைம்மாறு அளிப்பார். நேர்மையாளர்களாயினும் - நேர்மையற்றவர்களாயினும் இறைவன் பிரித்துப் பார்ப்பதில்லை. அனைவரின் மீதும் மழையைப் பொழிகின்றார் எனும் வரிகள் நம் வாழ்வின் அடிதளமாகட்டும். பகைமையை அறவே ஒழிப்போம். நாம் அனைவரும் இறைவனில் ஒன்றே என்று மாற்றுச் சமுதாயம் அமைப்போம்.

சுயஆய்வு :

  1. நான் நிறைவுள்ளவராக இருக்க முயற்சி யாது?
  2. பகைவரை அன்புச் செய்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது வார்த்தை என் வாழ்வின் நங்கூரமாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org