arulvakku

பிப்ரவரி 20 வியாழன்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 8:27-33

" நீர் மெசியா "

அருள்மொழி:

ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா" என்று உரைத்தார்,
மாற்கு 8: 29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம் என்னை யார் என்று சொல்கிறார்கள் என்று கேட்கின்றார். பலர் பலவிதம் சொல்வதை அவர்கள் கூறுகின்றனர். ஆனால் நீங்கள் யாரென்று சொல்கின்றீர்கள் என்று கேட்டபோது, பேதுருவின் "நீர் மெசியா" என்று கூறிய வார்த்தைகள் தன் தந்தையின் மாட்சிமை இங்குப் பேதுருவின் வழியாக மிளர்வதைக் காண்கின்றார். கேட்கின்றார். எனவே இதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்று நிபந்தனை விதிக்கின்றார். ஆம் அன்பர்களே! இன்று நாமும் உயிருள்ள மெசியாவின் வருகையை அவரது வார்த்தைகளை எடுத்துச் சொல்லும் போதும் வாழ்வில் வாழ்ந்துக் காட்டும் போதும் மற்றவர்கள் அதனை அவர்களே உணர்ந்துக் கொள்வார்கள். எதையும் பிற சகோதரர்களைப் போல் இயேசுவின் பெயரை வார்த்தையால் மட்டும் பேச மற்றும் இன்றி வாழ்ந்துக் காட்டுவோமே!

சுயஆய்வு :

  1. நான் உண்மை மெசியாவை ஏற்றுள்ளேனா?
  2. அதற்கான சான்று வாழ்க்கை வாழ்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது சான்றாக நான் வாழ வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org