arulvakku

பிப்ரவரி 19 - புதன்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 8:22-26

" பார்வைப் பெறுதல் "

அருள்மொழி:

இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின் மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வைப் பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.
மாற்கு 8: 25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு கண்பார்வையற்ற ஒருவருக்கு முழுபார்வைக் கிடைக்கச் செய்கின்றார். காரணம் இன்றும் அன்றும் சரி மக்கள் முழுமையான பார்வைப் பெறுவதில்லை. காரணம் கண்ணிருந்தும் காணாமலும், காதிருந்தும் கேளாத நிலை உள்ளது. அடுத்தவர்களின் துன்ப வேளையில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற நிலை ஓங்கியுள்ளது. இதற்குச் சான்றாகத் தான் நாம் முழுமையான பார்வைச் சமுதாயத்தின் மீது பதிக்க வேண்டும். அங்கே காணும் அவலங்களைத் தட்டிக் கேட்டு நீதிக்குக் குரல் கொடுக்கவும் இந்தப் பார்வைப் பெறுதல் கருபொருளாகின்றது.

சுயஆய்வு :

  1. நான் காணும் பார்வைத் தெளிவாக உள்ளதா?
  2. இல்லையேல் தெளிவாக வறியோருக்கு எனது முயற்சி என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! களங்கமற்ற கபடமற்ற பார்வையும் சமுதாயப் பணியும் செய்ய வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org