arulvakku

பெப்ருவரி 18 செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மாற்கு 8:14-21

இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?

அருள் மொழி

இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்ளுகிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?
மாற்கு 8:17

வார்த்தை வாழ்வாக

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களுடன் படகில் பயணமாகின்றார். ஆனால் சீடர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே ஒன்று மட்டும் தான் உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொள்வதை இயேசு கேட்க நேர்ந்தது. அந்த வேலையில் இறைமகன் சீடர்களைப் பார்த்து "இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை" என்று கேட்கின்றார். காரணம் இறைமகன் உடனிருப்பை உணராத சீடர்கள் புலம்புவது அன்றும் சரி, இன்றும் சரி. நாம் நமது உள்ளத்தில் அவரை உணர்ந்துச் சுவைத்து ருசித்து வாழும் போது நம்மில் இருப்பதை மறந்து இவ்வுலக வேலைகளில் இது இல்லையே - அது இல்லையே என்று அனேகர் புலம்புவதைப் பார்க்கின்றோம். ஏன் இந்த நிலை? பறவைகள் விலங்குகள் அனைத்தையும் சேமித்தா வைக்கின்றது? அதே போல் நமக்குள் இருப்பவர் செய்வார்.

சுய ஆய்வு

  1. இறைமகன் உடனிருப்பை என்னால் உணரமுடிகிறதா?
  2. அப்படி உணர எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உமது உடனிருப்பை உணர்ந்து வாழும் வரம் அருளும். ஆமென்.


www.anbinmadal.org