arulvakku

பெப்ருவரி 16 ஞாயிறு

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 5:17-37

" "கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள்" "

அருள்மொழி:

கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 5:25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு திருச்சட்டத்தின் வாக்குகளைப் பற்றி வெளிபடுத்துகின்றார். விண்ணும் மண்ணும் ஒழியாதவரைத் திருச்சட்டத்திலிரந்து அனைத்தும் நிறைவேறாதவரை, அச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என்று பதிவுசெய்கின்றார். அவ்வாறே இறைவாக்க நமக்கு வழங்கும் அறநெறிகளின்படி நாம் வாழ அழைப்ப விடுக்கின்றார். இதனை மறந்து மனம்போன போக்கில் வாழ்ந்த அடுத்தவரின் வாழ்வாதரத்தை அழிக்கும் இழிச்செயல்களில் ஈடுபடுவோரையும் வன்மையாகக் கண்டிக்கின்றார். எனவே தான் நாம் செய்கின்ற அறச்செயல்களே நமது நிலைவாழிவின் அடிதளம் அவற்றை மீறித் தீச்செயல்களுக்குஇடம் கொடுப்போமாகில் கடைசிகாசு திருப்பித் தரும் வரை அங்கிருந்து வெளியேறமாட்டீர்கள் என்று பதிவு செய்கின்றார்.

சுயஆய்வு :

  1. திருச்சட்டத்தின் பொருளை அறிகிறேனா?
  2. என் செயல்பாடுகள் எத்தகையது? ஆய்வுச் செய்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது கட்டளைகளைக் கடைப்பிடித்த வாழும் வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org