arulvakku

பெப்ருவரி 12 புதன்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 7:14-23

"தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன"

அருள்மொழி:

"தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன" என்றார்."
மாற்கு 7:23

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மனிதருக்கு வெளியிலிருந்து உள்ளே சென்ற அவர்களைத் தீட்டுபடுத்துவது ஒன்றுமல்லை. ஆனால் மனிதனின் உள்ளியிருந்து வெளியேரும் எண்ணங்கள் பரத்தமை, கனவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறூமை, பழிப்பு, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளியேறி அடுத்தவர் மனதைத் தீட்டுபடுத்தும் என்பதை இறைமகன் நல் ஆசானாகப் போதிக்கிறார். இவ்வாக்கு ஒவ்வொன்றும் மனித வாழ்வில் நீங்கா இடம் பதித்தல் வேண்டும். இல்லையேல் நாம் தீய எண்ணங்களுக்கும் - தீச் செயல்களுக்கும் ஆணிவேராகிடுவோம். என்பதை இறைமகன் சுட்டிக்காட்டுகிறார். எனவே நாம் இம்மையில் இறைவாக்கின்படி வாழ்ந்து மறுமையில் இறையண்பைச் சுவைப்போம்.

சுயஆய்வு :

  1. மனிதனை தீட்டுபடுத்துபவை எவை ?
  2. அவற்றை அறிந்து கொண்டு வாழ எனது முயற்சி யாது ?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நன்மை - தீமையை உய்த்துணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org