arulvakku

பெப்ருவரி 8 சனி

இன்றைய நற்செய்தி:

மாற்கு 6:30-34

" பரிவு கொண்டார் "

அருள்மொழி:

அவர் கரையில் இறங்கிய போது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு,அவர்களுக்குப் பலவற்றை கற்பித்தார்.
மாற்கு 6:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் சீடர்களை தொடர்ந்து ஓடி வருவதைக் கண்டார். அவர்கள் பலர் பலவித வேதனைகளால் தொடர்ந்து வாடுவதைக் கண்டதும் அவர்கள் பரிவு கொள்கின்றார். "யாருமில்லாத ஆடுகளைபோல அலைகின்றனரே" இத்தையோருக்காக தானே இந்த மண்ணுலகிற்கு வந்தேன். எனவே அவர்களது தேவைகளை நிறைவு செய்ய சித்தம் கொண்டார். ஆம் அன்பர்களே இன்றும் அனேகர் ஆயனில்லாத ஆடுகளைப் போல் இங்கும் அங்கும் அலைகின்றனர். நிலையான நிறை வாழ்வு உண்டு என்பதை உணரமுடியாத நிலையே. எனவே அவர்களை நிறைவாழ்வு பெற இறைவனை மன்றாடுவோம்.

சுயஆய்வு :

  1. தவறி போகின்றவர்களை தேடுகின்றேனா?
  2. அல்லது நானே தடுமாறுகின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது அருளை உணர முடியாதவர்கள் சிதறி ஓடுகின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org