arulvakku

பெப்ருவரி 4 செவ்வாய்

இன்றைய நற்செய்தி:

யோவான் 12:20-32

"இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வைப் பெறுவர்"

அருள்மொழி:

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.
யோவான் 12:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, கோதுமை மணி மண்ணில் மடிந்தால் தான் அது மிகுந்த விளைச்சளைக் கொடுக்கும் என்ற தன் வருகை-போதனை-பாடுகள்-மரணம்-உயிர்ப்பு ஆகிய கருப்பொருளை உள்ளடக்கி கோதுமைமணிக்கு உவமையாக சான்று பகர்கின்றார். அவ்வாறே நாமும் அடுத்தவருக்காக தம்மையே தியாகம் செய்யும்போது மிகுந்த பலனை நாம் அடைவோம். அதற்கான வழிமுறைகளை நமக்கு இறைவார்த்தை வாயிலாக போதிக்கின்றார். சுயநலம் துறந்து பொதுநலம் காண்பதே இறைத்திட்டம். ”தான்” என்ற நிலையிலிருந்து இறங்கி வந்து எல்லோருக்கும் எல்லாம் ஆனேன் என்ற பவுலடியாரின் வரிகள் இறைமகனின் தாக்கத்தை தீர்க்கும் பானமாகும். எனவே நாமும் இறைமகன் விரும்பும் நிலைவாழ்வை அடையும் பொருட்டு வாழும் காலம் அடுத்தவரின் நலனுக்கே என்று வாழ்வோம்.

சுயஆய்வு :

  1. எனது வாழ்வைப் பொருட்டாகக் கருதாமல் பணி செய்கிறேனா?
  2. நிலை வாழ்வின் மேன்மை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் அடுத்தவரின் நலனுக்காக வாழும் பேற்றினை தாரும். ஆமென்.


www.anbinmadal.org