பிப்ரவரி 22 - வெள்ளி

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 16:13-19

“மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?”

அருள்மொழி:

இயேசு, தம் சீடரை நோக்கி, “மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்..
மத்தேயு 16: 13

இன்றைய நற்செய்தியில், கேள்வி ஞானத்தில் கேட்டறிந்து வளர்ந்தவர்தான் இயேசு. தனது சீடர்களும் இவ்வாறே வளர வேண்டும் என்ற நோக்குடன் அவர்கள் முன், “மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்வியை வைக்கிறார். பேதுருவின் நிறைவான பதில், அவரைத் திருச்சபைக்கு அடித்தளமாக மாற்றுகிறது. இயேசுவின் சீடர்களாக, சீடத்திகளாக வாழ, நாம் பல வேளைகளில் ஆசைப்படுகிறோம். சீடனாக வாழ, இயேசுவை அறிந்திருக்க வேண்டும். பேதுரு, மானிட மகன் யாரென அறிந்திருந்தார். நாமும் இயேசுவை நம் மீட்பர் என அனுபவித்து அறிந்திருக்க வேண்டும். நிலைவாழ்வை இலக்காகக் கொள்ள வேண்டும்.

சுயஆய்வு :

  1. இயேசு எனக்கு யார்? பதில் என்ன?
  2. மானிட மகனை முழுமையாக அறிய முயற்சிக்கின்றேன்??

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! எல்லாரும் உம்முடைய சீடராக வாழ்ந்திட வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org