பிப்ரவரி 19 செவ்வாய்

இன்றைய நற்செய்தி:

மாற்கு. 8:14-21

""பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்"

அருள்மொழி:

அப்பொழுது இயேசு, "பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மாற்கு. 8:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு "பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்" என்று கூறுகிறார். தன்னை தன் சீடர்கள் இன்னும் பிரிந்துக் கொள்ளவில்லை என்ற வருத்தத்தில் அவர்களை கடிக்கின்றார். எண்ணங்கள் விதைக்கப்படுகின்ற போது, புளிப்பு மாவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துமோ அத்தகைய மாற்றத்தை எண்ணங்களும் ஏற்படுத்த கூடிய சக்தி உண்டு.நல்ல எண்ணங்கள் நல்ல விளைவுகளையும், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் விளைவிக்கும் என்பதாலேயே, எச்சரிக்கின்றார்.நாமும் இன்றைக்கு எல்லா கருத்துக்களும் நல்லது தான் என்று இல்லாமல் எதையுமே கேள்வி கேட்டு பார்ப்பது நல்லது. எச்சரிக்கையாக இருந்து நம்மை காத்துக் கொள்வது நம்முடைய பொறுப்புத் தான்.

சுயஆய்வு :

  1. நல்ல எண்ணங்கள் நல்ல விளைவுகளைத் தாரும் என்பதை உணர்கின்றேனா?
  2. தீமை பலுகிப் பெருகமால் இருக்க எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது வார்த்தைகளின் மேன்மையை உணர்ந்து உம் பணியாற்ற வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org