பிப்ரவரி 18 திங்கள்

இன்றைய நற்செய்தி:

மாற்கு. 8:11-13

"இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது"

அருள்மொழி:

அவர் பெருமூச்சுவிட்டு, "இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
மாற்கு. 8:12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவை சோதிப்பதற்காக பரிசேயர்கள் வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி கேட்டார்கள். அவர்கள் நம்பிக்கையின் முன்னிட்டு கேட்கவில்லை. மாறாக அவரை சோதிக்க விரும்பினார்கள். அவர்களுக்கு இயேசு அடையாளம் தர உறுதியாக மறுத்துவிடடார். ஏனெனில் அவர்கள் எதையும் நம்பப்போவதில்லை. இஸ்ரயேல் மக்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அப்படிப்பட்டவர்களிடம் இறைவன் மட்டில் ஆழமான நம்பிக்கை இருந்திருக்கவேண்டும்!. ஆனால், அத்தகைய நம்பிக்கை அவர்களிடம் இல்லாததினால் இயேசு வருத்தப்படுகின்றார்.

சுயஆய்வு :

  1. உமது அன்பை முழுமையாக நான் உணர்க்கின்றேனா?
  2. உம்மில் முழுமையாக நம்பிக்கைக் கொள்ள எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நூற்றுவத் தலைவனைப் போன்று கானானியப் பெண்மணியைப் போன்று உம்மிடம் ஆழமான நம்பிக்கை வைத்து வாழ வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org