arulvakku

பிப்ரவரி 17 ஞாயிறு

இன்றைய நற்செய்தி:

லூக்கா 6:20

"குணம் அடைந்தான்"

அருள்மொழி:

ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்!
லூக்கா 6:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் பேறுபெற்றோர்களைச் சற்று கூர்ந்து நோக்கினால் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். இயேசு ஏழைகளையும் (ஏழ்மை) பட்டினியாய் கிடப்போரையும் (பட்டினி) அழுவோரையும் (அழுகை) மானிடமகன் பொருட்டு துன்பப்படுவோரையும் (துன்பம்) பேறுபெற்றோர் எனச் சொல்கிறாரே, இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஆம் அதற்கு முக்கிய காரணம் நம் சுயநலமும், அநீதியுமே. இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதும், சக மனிதர்களை அன்பு செய்வதுமே முக்கியம். இப்படிப்பட்டோர் மட்டுமே பேறுபெற்றோராக மாற முடியும்.

சுயஆய்வு :

  1. யார்,யார் எல்லாம் பேறுபெற்றோர்?
  2. அவர்களுக்கு எனது பணி என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே!என் சுயநலத்தை நீங்கிவிட்டு நானும் நின் பணி செய்ய வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org