arulvakku

பிப்ரவரி 16 சனி

இன்றைய நற்செய்தி:

மாற்கு 8:1-10

"திரளான மக்கள் வயிறார உண்டார்கள்."

அருள்மொழி :

இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், ``நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. என்று கூறினார்.
மாற்கு 8-2

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இயேசு எல்லா உயிரையும் தன்னுடைய உயிரைப் போன்று நேசிக்கின்றார். அதனால் தான் எல்லார் மீதும் இரங்கி, அவர்களுக்கு உணவற்ற பாலைநிலத்தில் அற்புதமான வழியில் உணவளிக்கின்றார். நாமும் இயேசுவிடம் இருந்த பரிவிரக்கத்தையும் நமதாக்கிக் கொண்டு, நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

சுயஆய்வு:

  1. நான் இயேசுவைப் போல் பரிவிரக்கம் உள்ளவராக இருக்கின்றேனா?
  2. அவரைப்போல் நானும் அடுத்திருப்போருக்கு உதவுகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது பரிவிரக்கம் குணத்தை எங்களுக்குத் தாரும். ஆமென்.


www.anbinmadal.org