arulvakku

பிப்ரவரி 15, வெள்ளி்

இன்றைய நற்செய்தி

மாற்கு 7:31-37

``எப்பத்தா'' அதாவது `திறக்கப்படு'

அருள்மொழி :

பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, ``எப்பத்தா'' அதாவது `திறக்கப்படு' என்றார்.
மாற்கு 7:

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை இங்கே குணப்படுத்திய நிகழ்வை வாசிக்கிறோம். தன்னிடம் நம்பிக்கையோடு வரும் எவரையும் இயேசு வெறுங்கையோடு அனுப்புவதில்லை என்பதை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்துள்ளார். தான் செய்த வல்லச் செயல்களை பிறருக்கு தெரிவிக்க வேண்டாம் என்று தெரிவித்தும் அவர்களின் வியப்பில் ஆழ்ந்தவர்களாகவும், நம்பிக்கையில் மேலானவர்களாகவும் இருந்ததால் அவர்களின் பாரட்டுகளையும் புகழ்ந்ததையும் தடுக்க முடியவில்லை. நாம் இயேசுவை அடுத்தவர்கள் அறியும் வண்ணம் பறைச்சாற்றுவோம். வாரீர்!!

சுயஆய்வு:

  1. இயேசுவின் வார்த்தைகளை கேட்க எனது முயற்சி என்ன?
  2. என்னில் இயேசுவை எவ்வாறு பதிவு செய்வேன்?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! நிலையற்ற உலகில் நிலையான வாழ்வை அடைய உம் வார்த்தைகளை கடைபிடித்து வாழ வரம் தர மன்றாடுகின்றேன். ஆமென்.

பொங்கல் வாழ்த்துக்கள்


www.anbinmadal.org