arulvakku

பிப்ரவரி 14 - வியாழன்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 7:24-30

"சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே!"

அருள்மொழி :

அதற்கு அப்பெண், ``ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே'' என்று பதிலளித்தார்.
மாற்கு 7:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் கானானியப் பெண்ணின் நம்பிக்கையை இறைமகன் இயேசு நமக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறார். இஸ்ரயேல் மக்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் கானானிய மக்கள் என்று எண்ணிக் கொண்டியிருந்தவர்களுக்கு அவர்களை விட நம்பிக்கையில் உயர்ந்தவர்கள் கானானிய மக்களே! என்பதை இங்கே உணர்த்துகிறார். நம்பிக்கையே வாழ்க்கையை நடத்திச்செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது இந்தப் பெண்ணின் செயல்கள். இயேசுவும் அவளின் பதிலை விரும்பி ஏற்றுக் கொண்டதால் அங்கே பேய் விலகிச் சிறுமியும் குணமானாள். நமது நம்பிக்கை இயேசுவில் உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் இருந்தால், கேட்கும் நம் எண்ணங்களை நிறைவேற்றித் தருவார். நம்புவோம். பெற்றுக் கொள்வோம்.

சுயஆய்வு :

  1. என் நம்பிக்கை எத்தகையது? அறிந்துள்ளேனா?
  2. கானானியப் பெண்போல் என் நம்பிக்கை இயேசுவோடு உள்ளது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! கானானியப் பெண் போல நானும் உம் மேலே நம்பிக்கை வைக்கத் தேவையான அருள் வரங்களை தாரும். ஆமென்.


www.anbinmadal.org