arulvakku

பிப்ரவரி 13- புதன்

இன்றைய அருள்வாக்கு

மாற்கு 7:14-23

“மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்." ”

அருள்மொழி :

வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.
மாற்கு7:14-

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தான் கூறிய உவமையைப் புரிந்து கொள்ள முடியாத தன் சீடர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். மானிடன் தான் உணவால் மாசுபடுவதில்லை. ஆனால் உள்ளத்தில் ஆழத்திலிருந்து வெளியே வரும் வார்த்தைகள் தான் அனைவரையும் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்து பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. இவ்வாறு தீமை மனிதனுக்கு வெளியே அல்ல. உள்ளத்திலிருந்து புறப்படுகின்றது என்று கூறிய இயேசுவின் வார்த்தைகளை நம் மனத்தில் பதிவு செய்வோம்.

சுயஆய்வு :

  1. என் வார்த்தைகள் அடுத்தவரை புண்படுத்தும் என்பதை உணர்கிறேனா?
  2. அவற்தைத் தவிர்க்க எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! நான் அடுத்தவர்களை மனம் நோக்கச் செய்யாமல் வாழ வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org